தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்மின்ஸ் ஹாட்ரிக்; பணிந்தது பங்ளாதேஷ்

1 mins read
e77fc49c-0b06-4ba2-a21d-f4f780001788
மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்த ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ். - படம்: ஏஎஃப்பி

ஆன்டிகுவா: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் பிரிவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 28 ஓட்ட வித்தியாசத்தில் பங்ளாதேஷ் அணியைத் தோற்கடித்தது.

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது இந்த ஆட்டத்தின் சிறப்பம்சம்.

முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் நஜ்முல் ஹொசைன் சான்டோ 41 ஓட்டங்களை எடுத்தார்.

இன்னிங்சின் 18வது ஓவரின் கடைசி இரு பந்துகளிலும் 20வது ஓவரின் முதல் பந்திலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

அதனைத் தொடர்ந்து பந்தடித்த ஆஸ்திரேலிய அணி, பங்ளாதேஷ் அணியின் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து, ஓட்டம் குவித்தது. அவ்வணி 11.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

அதன்பின் ஆட்டம் தொடர வாய்ப்பில்லாமல் போகவே, டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவ்வணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களைக் குவித்தார்.

கம்மின்ஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்