சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடித் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஹெலிகாப்டர் மூலம் சிட்னி விளையாட்டரங்கத் திடலில் தரையிறங்கினார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ‘பிக் பாஷ்’ டி20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடுகிறார் வார்னர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 12) வார்னரின் சகோதரருக்குத் திருமணம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற வார்னர், அதே நாள் மாலை சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவும் ஆர்வமாக இருந்தார்.
இதனையடுத்து, திருமணம் நடந்த இடத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாகப் பறந்து வந்து, சிட்னி திடலில் தரையிறங்கினார் வார்னர். இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது.
அண்மையில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளிலிருந்து வார்னர் ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.