லிவர்பூலின் முன்னணி ஆட்டக்காரர் டியோகோ ஜோட்டாவின் உயிரைப் பறித்த விபத்து நடந்த இடத்தில் அவர் விளையாடிபோது அணிந்திருந்த 20ஆம் எண் சட்டை வைக்கப்பட்டுள்ளது. மனைவியையும் மூன்று குழந்தைகளையும் விட்டுப் பிரிந்த ஜோட்டாவுக்கு வயது 28.
வியாழக்கிழமையன்று ஸமோரா நகரில் கார் ஒன்றில் தம் சகோதரரும் சக விளையாட்டாளருமான 26 வயது ஆன்ட்ரே சில்வாவுடன் சென்றுகொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளானது.
போர்ச்சுகலைச் சேர்ந்த ஜோட்டா, பிரிட்டனுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார்.
விபத்து நேர்ந்த இடத்தில் வைக்கப்பட்ட ஜோட்டாவின் சட்டையைக் காட்டும் படத்தை, சக லிவர்பூல் காற்பந்தாட்டக்காரர் கோஸ்டாஸ் ஸிமிகாஸ் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்.