தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகச் சிறந்த காற்பந்து வீரர் விருதை வென்ற டெம்பல்லே

1 mins read
9c92ca90-d3be-4fa6-a7f9-a36571bbc1e2
ஆண்களுக்கான விருதை ஓஸ்மான் டெம்பல்லேவும் பெண்களுக்கான விருதை பான்மட்டியும் வென்றனர். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: 2025ஆம் ஆண்டுக்கான ஆகச் சிறந்த காற்பந்து வீரர் விருதை (பாலான்டோர் விருது) பிரான்ஸ் அணியின் ஓஸ்மான் டெம்பல்லே வென்றார்.

டெம்பல்லே பிரான்ஸ் காற்பந்து குழுவான பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) குழுவுக்குத் தற்போது விளையாடி வருகிறார்.

இவ்வாண்டு பிஎஸ்ஜி குழு சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் 28 வயது டெம்பல்லே.

இதுவரை ஆறு பிரெஞ்சு வீரர்கள் பாலான்டோர் விருதை வென்றுள்ளனர்.

டெம்பல்லேவுக்கு பார்சிலோனாவின் இளம் புயல் லமின் யமால் கடும் போட்டி கொடுத்தார். இருப்பினும் டெம்பலேவின் சிறப்பான ஆட்டம் கவனிப்பாளர்களை ஈர்த்தது.

டெம்பல்லே 2023ஆம் ஆண்டு பிஎஸ்ஜி அணியில் இணைந்தார்.

ஆகச் சிறந்த பெண் காற்பந்து வீராங்கனை விருதை ஐடானா பான்மட்டி வென்றார். அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவ்விருதை வென்றார்.

இப்பருவத்தின் சிறந்த அணியாக பிஎஸ்ஜி தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த பயிற்றுவிப்பாளராக பிஎஸ்ஜி குழுவின் லூயிஸ் என்ரிக்கே அறிவிக்கப்பட்டார்.

சிறந்த கோல் காவலருக்கான விருதை (யா‌ஷின் கிண்ணம்) ஜியான்லுகி டன்னருமா வென்றார். அவர் கடந்த பருவம் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடினார். தற்போது அவர் மான்செஸ்டர் சிட்டியில் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்