நடராஜனின் மகளை கொஞ்சும் டோனி (காணொளி)

1 mins read
ef3a7128-5be1-42b9-b986-19377b33fea1
படம்: டுவிட்டர்/சிஎஸ்கே -

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் மகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி கொஞ்சி விளையாடும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) இரவு சேப்பாக்கம் விளையாட்டரங்கில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின.

அதில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆட்டம் முடிந்த பிறகு டோனி முன்னாள் வீரர்களான பிரையன் லாரா, டேல் ஸ்டைன், முத்தையா முரளிதரன் உள்ளிட்டவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அதன் பிறகு தமிழ்நாடு வீரர் நடராஜனின் குடும்பத்தினரை டோனி சந்தித்தார்.

அப்போது நடராஜனின் மகளுடன் தோனி கொஞ்சி கொஞ்சிப் பேசினார், சிறிது நேரம் அவர் விளையாடவும் செய்தார். பார்க்க அழகாக இருந்த அந்தக் காணொளியை டோனியின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நடராஜன் குடும்பத்தினர் டோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் காணொளியில் இருந்தது.

குறிப்புச் சொற்கள்