தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டைமண்ட் லீக் திடல்தட வெற்றியாளர் போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 2வது இடம்

2 mins read
d7a57923-5eb6-4a28-a357-2771192835ec
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. - படம்: இந்திய ஊடகம்

பிரசல்ஸ்: டைமண்ட் லீக் திடல்தட வெற்றியாளர் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 2வது இடம் கிடைத்தது. முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் திடல்தட வெற்றியாளர் இறுதிப் போட்டி பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கியது.

உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட போட்டியின் இறுதிச் சுற்று தற்போது பிரசல்ஸில் நடைபெற்று வருகிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றிருந்தனர். 3 ஆயிரம் மீட்டர் தடையோட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே 9வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்கினார். மொத்தம் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் அதிகபட்சமாக 3வது சுற்றில் 87.86 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடத்தைக் கைப்பற்றினார்.

இதே போட்டியில் கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். அவர் 87.87 மீட்டர் தூரம் எறிந்தார். இதே போட்டியில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் 85.97 மீட்டர் தூரம் எறிந்து 3வது இடத்தைப் பெற்றார்.

முதலிடம் பெற்ற பீட்டர்ஸுக்கு டைமண்ட் லீக் கிண்ணம், 30 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத் தொகையாக 12 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்