தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யுனைடெட்டில் ஏமாற்றம், நேப்பலியில் நிலை ஏற்றம்: மெக்டோமினேக்குப் பெருமிதம்

1 mins read
1e95dedd-1161-4df7-a267-3ee878a56658
வெள்ளிக்கிழமை (மே 23) கஹ்லியாரிக்கு எதிரான இத்தாலிய லீக் ஆட்டத்தில் நேப்பலியின் முதல் கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் ஸ்காட் மெக்டோமினே (இடது). - படம்: ராய்ட்டர்ஸ்

நேப்பல்ஸ்: இத்தாலியின் சரீ ஆ (Serie A) லீக் விருதை இந்தப் பருவம் நேப்பலி குழு வென்றுள்ளது.

33 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2023ல் சரீ ஆ லீக் விருதை வென்ற நேப்பல்ஸ், இப்போது மூவாண்டுகளில் இரண்டாவது முறையாக அவ்விருதை வென்றிருக்கிறது. அதோடு, நேப்பலியின் ஸ்காட் மெக்டோமினே, இப்பருவத்துக்கான சரீ ஆ லீக்கின் ஆகச் சிறந்த விளையாட்டாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டில் சோபிக்க முடியாமல் நேப்பலியில் சேர்ந்த 28 வயது மெக்டோமினேக்கு இந்தப் பருவம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இப்பருவம் இத்தாலிய லீக்கில் 34 ஆட்டங்களில் 12 கோல்களைப் போட்டது மட்டுமின்றி ஆறு கோல்ககள் உதவவும்  செய்துள்ளார் ஸ்காட்லாந்து வீரர் மெக்டோமினே.

நேப்பலி நட்சத்திரம் குவிச்சா க்வாராட்ஸ்கேலியா பிரான்சின் பிஎஸ்ஜியில் இவ்வாண்டு சேர்ந்த பிறகு மெக்டோமினே நேப்பலியின் நட்சத்திர விளையாட்டாளராக உருவெடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்