25வது பொதுவிருதை வெல்லத் துடிக்கும் ஜோக்கோவிச்

1 mins read
bc322d50-80c5-41b8-97af-cce17e798f5e
 37 வயது நோவாக் ஜோக்கோவிச் - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற உற்சாகத்தில் உள்ளார்.

பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இப்போதுதான் ஒலிம்பிக்கில் அவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் 37 வயது ஜோக்கோவிச் அடுத்த சவாலுக்குத் தயாராகியுள்ளார்.

தற்போது அமெரிக்க பொது விருதுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தொடங்கிவிட்டன. நடப்பு வெற்றியாளரான ஜோக்கோவிச் கிண்ணத்தை தக்கவைக்க கடுமையாகப் போராடுவார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இளம் வீரர்களால் ஜோக்கோவிச்சுக்கு அதிக நெருக்கடி ஏற்படுகிறது. இவ்வாண்டில் ஜோக்கோவிச் எந்த பொதுவிருதையும் வெல்லவில்லை.

காயம் காரணமாக பிரெஞ்சு பொது விருதில் இருந்து விலகினார். ஆஸ்திரேலிய, விம்பிள்டன் பொது விருதில் தோல்வியடைந்தார்.

அதனால் இம்முறை ஜோக்கோவிச் தமது அனுபவத்தையும் துடிப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி 25வது பொது விருதை வெல்வார் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்