டென்னிஸ்: ‘பிரெஞ்‌சு பொது விருதை தக்கவைப்பது சிரமம்’

டென்னிஸ்: ‘பிரெஞ்‌சு பொது விருதை தக்கவைப்பது சிரமம்’

1 mins read
90119e7d-19ce-47a4-a6f0-fdc405369151
தரவரிசையில் முதலிடத்தில் உள்ள 37 வயது நோவாக் ஜோகோவிச். - படம்: இபிஏ

பாரிஸ்: பிரெஞ்சு பொது விருது டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது.

ஆண்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள 37 வயது செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சும் போட்டியில் கலந்துகொள்கிறார்.

“கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு இருக்காது, இம்முறை பிரெஞ்சு பொது விருதை வெல்வது சற்றுக் கடினம்,” என்று ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

24 முறை பொது விருதுகளை வென்றுள்ள ஜோகோவிச் கடந்த சில மாதங்களாக சரியாக விளையாடவில்லை.

“ பெரிய அளவில் முயற்சி எடுக்க வேண்டும், ஒவ்வொரு ஆட்டமாக முன்னேற வேண்டும் என்பதே இலக்கு. தொடரில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் செல்வேன்,” என்றார் ஜோகோவிச். 

“டென்னிசை விட்டுவிட்டு வெளி உலகில் நடப்பது பற்றி சிந்தித்தால் விளையாட்டில் சாதிக்க முடியாது, தற்போது முழுகவனமும் பிரெஞ்சு பொது விருதில் உள்ளது. அதற்குத் தயாராகி வருகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.  

குறிப்புச் சொற்கள்