ஃபிராங்ஃபர்ட்: ஜெர்மானிய காற்பந்து லீக் போட்டியில் பொருசியா டோர்ட்மண்ட் குழு, தொடர் தோல்விகளால் சிக்கித் தவிக்கிறது.
ஃபிராங்ஃபர்ட் குழுவுடனான ஆட்டத்தில் அது 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இதன்மூலம் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் டோர்ட்மண்ட் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 17) ஃபிராங்ஃபர்ட் நகரில் நடைபெற்றது.
ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் கோல் போடும் வாய்ப்பை டோர்ட்மண்ட் நூலிழையில் தவரவிட்டது.
செர்ஹோ குயிராசி தலையால் முட்டிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது.
ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஃபிராங்ஃபர்ட் அதன் முதல் கோலைப் போட்டு டோர்ட்மண்ட் ஆட்டக்காரர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ஃபிராங்ஃபர்ட்டின் இரண்டாவது கோலை ஆஸ்கார் ஹோய்லண்ட் போட்டு டோர்ட்மண்ட்டின் கதையை முடித்து வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் இத்தாலியின் போலோனா குழுவுடன் டோர்ட்மண்ட் மோதுகிறது.
ஜெர்மானிய லீக் பட்டியலில் டோர்மண்ட் 25 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.
ஃபிராங்ஃபர்ட் குழு 36 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.