புடாபெஸ்ட்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் நெதர்லாந்தும் ஹங்கேரியும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
இந்த ஆட்டம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் அக்டோபர் 11ஆம் தேதியன்று நடைபெற்றது.
நெதர்லாந்தின் அணித் தலைவர் வெர்ஜில் வேன் டைக்கிற்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, நெதர்லாந்து வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் விளையாடியது.
ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ஹங்கேரி கோல் போட்டு முன்னிலை வகித்தது.
நெதர்லாந்துக்குக் கோல் போட பல பொன்னான வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் அவற்றை அது தவறவிட்டது.
இருப்பினும், மனந்தளராமல் போராடிய நெதர்லாந்து கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தது.