காற்பந்து: அடுத்த சுற்றுக்கு கால்பதிக்கும் இங்கிலாந்து, குரோ‌ஷியா

காற்பந்து: அடுத்த சுற்றுக்கு கால்பதிக்கும் இங்கிலாந்து, குரோ‌ஷியா

1 mins read
75a296f4-df3a-4ff2-a9bf-fbe4b35b999a
செக் குடியரசு குழுவுடன் பொருதிய ஆட்டத்தில் வெற்றி கோலை புகுத்தினார் இங்கிலாந்தின் ஸ்தர்லிங். படம்: இபிஏ -

யூரோ காற்பந்து போட்டியின் 'டி' பிரிவு குருப் ஆட்டங்கள் இன்று அதிகாலை (ஜூன் 23ஆம் தேதி) நடைபெற்றன.

அதில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு குழுவை வீழ்த்தி குருப் 'டி' பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் ஒரே கோலை இதுவரையில் சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்தின் முன்னணி ஆட்டக்காரர் ரஹிம் ஸ்தர்லிங் ஆட்டத்தின் முதல் பாதியில் புகுத்தினார்.

அடுத்த 'ரவுண்ட் ஒஃப் 16' சுற்றில் அது காற்பந்து ஜாம்பவான்களான பிரான்ஸ், ஜெர்மனி அல்லது போர்‌ச்சுகல் குழுக்களை சந்திக்கக்கூடும்.

மற்றொரு 'டி' பிரிவு குருப் ஆட்டத்தில், குரோ‌ஷியா அணி ஸ்காட்லாந்து அணியுடன் பொருதியது.

அதில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கும் குரோ‌ஷியா அணி போட்டியின் அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்துடன் முன்னேறுகிறது.