லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் சென்றபோது கொள்ளை சம்பவம் நடந்ததாக இங்கிலாந்து காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவம் டர்ஹம் பகுதியில் உள்ள ஸ்டோக்ஸ் வீட்டில் அக்டோபர் 17ஆம் தேதி நடந்தது. அப்போது அந்த வீட்டில் ஸ்டோக்ஸ் மனைவியும் அவரது இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.
முகமுடி அணிந்த சிலர் வீட்டை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக 32 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகைகள், விலை உயர்ந்த பொருள்கள், பரிசுகள் உள்ளிட்டவை திருடு போனதாக ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.