தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலரது கோரிக்கையை ஏற்று மொயின் அலி மீண்டும் டெஸ்ட் ஆட்டங்களுக்குத் திரும்புகிறார்

1 mins read
a970ed29-c9a6-4c3e-95e4-3a67d8f7e934
படம்: ராய்ட்டர்ஸ் -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 'ஆல்ரவுண்டர்' மொயின் அலி மீண்டும் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளார்.

35 வயதான மொயின் அலி 2021ஆம் ஆண்டு டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரை உலகக் கிண்ணத்திற்கு சமமாகப் பார்க்கின்றனர். அதனால் அதை வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும்.

ஆனால் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச், காயம் காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆ‌ஷஸ் தொடரில் விளையாடமுடியாமல் போனது.

அதனால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ராபர்ட் கீ, டெஸ்ட் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ், பயிற்றுவிப்பாளர் பிரன்டன் மெக்கலம் ஆகியோர் மொயின் அலியுடன் பேசினர்.

அதனைத் தொடர்ந்து மொயின் அலி மீண்டும் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாட ஒப்புக்கொண்டார்.

ஆ‌ஷஸ் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடும் இங்கிலாந்து அணி ஜூன் 7 அறிவிக்கப்பட்டது, அதில் மொயின் அலியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரி‌ஷி சுனக்கும் மொயின் அலி டெஸ்ட் ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆ‌ஷஸ் தொடர் இம்முறை இங்கிலாந்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் ஜூன் 1 எட்பஸ்டனில் நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்