தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இங்கிலாந்து ரசிகர்களுக்குத் தேவை அணியின் புத்துணர்ச்சி

2 mins read
f32c610d-8516-4e47-92db-eb58284f70f1
இங்கிலாந்து ஆட்டக்காரர்களிடம் உரையாடுகிறார் அதன் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் (இடக்கோடி) - படம்: ராய்ட்டர்ஸ்

கெல்சென்கிர்சென்: ஒரு குழுவின் வெற்றிக்கு ரசிகர்கள் அக்குழுவுக்கு அளித்து வரும் தொடர் ஆதரவுதான் முக்கியக் காரணம் என்று இங்கிலாந்து தேசிய காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அதன் யூரோ 2024 தொடக்கப் பிரிவு ஆட்டங்களை முடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியவுடன் தனது ஆட்டக்காரர்களிடம் சவுத்கேட் இதைக் கூறினார்.

இருப்பினும், ரசிகர்களின் பொறுமைக்கும் ஓர் அளவுண்டு என்று அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இங்கிலாந்து அடுத்த ஆட்டத்தில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்.

சி பிரிவில் இங்கிலாந்து முதல் இடத்தைப் பிடித்தாலும் அது ஆடிய மூன்று ஆட்டங்களில் மொத்தம் இரண்டு கோல்களைத்தான் போட்டிருக்கிறது.

ஜூலை 14ஆம் தேதி பெர்லினில் நடைபெறவிருக்கும் யூரோ 2024 இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து தகுதி பெற வேண்டுமானால், அது அடுத்து ஆடவிருக்கும் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். அதற்கு முன்னதாக ஜூன் 30ஆம் தேதி ஸ்லோவாக்கியாவை வெற்றி காண வேண்டும்.

ஸ்லோவாக்கியாவை எடுத்துக்கொண்டால், இங்கிலாந்தை எதிர்கொள்ள அது பயப்படவில்லை. ஒன்றில் இரண்டு பார்த்துவிடுவோம் என்ற வேட்கையில்தான் அக்குழு தயார்நிலையில் உள்ளது.

“இங்கிலாந்து அணி தனது ஆட்டக்காரர்களின் தனிப்பட்ட திறனை அதிகம் சார்ந்துள்ளது. நாங்களோ ஒரு குழுவாகச் செயல்படுகிறோம். அதே உத்தியுடன் நாங்கள் இங்கிலாந்துக்கு அழுத்தம் கொடுத்து விளையாடினால், அதனைத் தோற்கடிக்கும் சாத்தியமும் உண்டு,” என்று ஸ்லோவாக்கியா அணியின் கேப்டன் மிலன் ஸ்கிரினியர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்