தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய அணியிலிருந்து ஓய்வுபெறும் மொயீன் அலி

1 mins read
74d33137-d151-4be9-bc2b-864f02a67310
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டொயீன் அலி. - படம்: ஏஎஃப்பி / இணையம்

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, தேசிய அணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயது அலி, டெய்லி மெயில் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அதனைத் தெரிவித்தார். அந்த நேர்காணல் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 7) வெளியானது.

கிரிக்கெட் ஆட்டத்தில் எல்லா பொறுப்புகளையும் ஏற்று விளையாடும் ஆற்றலைக் (ஆல்ரவுண்டர்) கொண்ட அலி, 2014ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்துக்கு 68 டெஸ்ட் ஆட்டங்கள், 138 ஒருநாள் ஆட்டங்கள், 92 டி20 ஆட்டங்கள் ஆகியவற்றில் விளையாடியுள்ளார். பர்மிங்ஹம் நகரில் பிறந்த இவர், கடந்த ஜூன் மாதம் கடைசியாக இங்கிலாந்துக்குக் களமிறங்கினார்.

“நான் இங்கிலாந்துக்குப் பலமுறை விளையாடிவிட்டேன். இனி அடுத்த தலைமுறை தலைதூக்கவேண்டும். அது என்னிடம் விவரிக்கப்பட்டது. (ஓய்வுபெற) இதுவே சரியான நேரம் என்று நான் நினைத்தேன். என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன்,” என்று அலி கூறினார்.

டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணித்தலைவராக விளங்கிய முதல் ஆசிய வம்சாவளி வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் அலி. இவர், டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் ஆட்டங்களிலும் ஐந்து முறை சதமடித்துள்ளார். மேலும், மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தம் 366 விக்கெட்டுகளை வெளியேற்றியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்