இபிஎல்: கோவன்ட்ரியை வீழ்த்திப் பருவத்தை அதிரடியாகத் தொடங்கியது ஆர்சனல்

இபிஎல்: கோவன்ட்ரியை வீழ்த்திப் பருவத்தை அதிரடியாகத் தொடங்கியது ஆர்சனல்

1 mins read
49f1b1b5-d8f0-4fa8-85d9-4c1d6d70b649
முதல் கோலைப் போட்ட மகிழ்ச்சியில் கொண்டாடிய ஆர்சனலின் கை ஹேவர்ட்ஸ் (இடம்). - படம்: இபிஏ
Google News Preferred Icon

லண்டன்: இங்கிலி‌‌ஷ் பிரிமியர் லீக் விருதைத் தற்காக்கும் முயற்சியை அதிரடியாகத் தொடங்கியிருக்கிறது ஆர்சனல்.

இந்தப் பருவத்தின் முதல் ஆட்டத்தில் அது 3-0 எனும் கோல் கணக்கில் கோவன்ட்ரி சிட்டியை வீழ்த்தியது. சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடந்தது.

ஆட்டம் தொடங்கிய 15வது நிமிடத்தில் கை ஹேவர்ட்ஸ், திறன் காட்டினார். அடுத்த எட்டே நிமிடத்தில் இன்னொரு கோலைப் புகுத்தினார் புக்காயோ சக்கா.

பின்னர் 49வது நிமிடத்தில் ஆர்சனலின் மூன்றாவது கோல் வந்தது. அதனைப் போட்டவர் அணித் தலைவர் மார்ட்டின் ஒடிகார்ட்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீகிற்குள் அடியெடுத்த வைத்த கோவன்ட்ரிக்கு முதல் ஆட்டம் பேரடியாக அமைந்தது.

ஆர்சனலைப் பொறுத்தவரை, இந்தப் பருவத்திற்குச் சரியான தொடக்கமாக முதல் வெற்றி அமைந்துள்ளது என்று கூறினார் ஒடிகார்ட்.

குறிப்புச் சொற்கள்