அதிரடி முடிவுகள் இடம்பெற்ற ‘இபிஎல்’ ஆட்டங்கள்

அதிரடி முடிவுகள் இடம்பெற்ற ‘இபிஎல்’ ஆட்டங்கள்

2 mins read
85e01dc8-bb7b-41b8-aea3-ecbf9da6c091
நியூகாசல் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூலின் முன்னாள் நியூகாசல் வீரர் அலெக்சாண்டர் இசாக் (இடது). - படம்: இபிஏ
Google News Preferred Icon

நியூகாசல்: ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்ற இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்து ஆட்டங்கள் விறுவிறுப்பாக அமைந்தன.

நியூகாசல் யுனைடெட்டும் லிவர்பூலும் மோதிய ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் ஆன்டனி இலாங்கா நியூகாசலை முன்னுக்கு அனுப்பினார். பிறகு 55வது நிமிடத்தில் லிவர்பூலின் கொடி காக்போ, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இரண்டே நிமிடங்களில் ஜோ வில்லக் நியூகாசலை மீண்டும் முன்னுக்கு அனுப்பினார். ஆட்டம் நிறைவடையவிருந்த நேரத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி லிவர்பூலைக் காப்பாற்றினார் டொமினிக் சொபொஸ்லாய்.

பொதுவாக விலர்பூல்-நியூகாசல் ஆட்டங்கள் விறுவிறுப்பாக அமையும். அதேபோல் இந்த ஆட்டமும் அமைந்தது.

வில்லாவை வீழ்த்திய பிரைட்டன்

அதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் பிரைட்டன், எதிர்பாராவிதமாக ஆஸ்டன் வில்லாவை 4-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது.

வில்லாவுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்ட ஜேக் ஹின்‌ஷல்வுட்.
வில்லாவுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்ட ஜேக் ஹின்‌ஷல்வுட். - படம்: ஏஎஃப்பி

ஆட்டம் தொடங்கி முதல் 31 நிமிடங்களிலேயே நான்கு கோல்களும் விழுந்தன. 40வது நிமிடத்தில் வில்லாவின் ஜோவாவ் கொமெசுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

சென்ற லீக் பருவத்தில் ஒரு கட்டம் வரை விருதை வெல்வதற்கான போட்டியில் இருந்த வில்லா இப்பருவத்தைப் படுமோசமாகத் தொடங்கியிருப்பது ஆச்சரியம் தரும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளை, சென்ற பருவத்தையும் அக்குழு மோசமாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தோல்வியிலிருந்து மீண்ட சிட்டி

ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றோர் ஆட்டத்தில் போர்ன்மத்துக்கு எதிராகத் தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றியைப் பறித்துக்கொண்டது மான்செஸ்டர் சிட்டி.

ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் போர்ன்மத் முன்னுக்குச் சென்றது. பிறகு 84வது நிமிடத்தில் சிட்டி சமநிலை கண்டது.

ஆட்டத்தில் போர்ன்மத்தின் ஒரே கோலைப் போட்ட மார்க்கஸ் டேவனியர் (வலது).
ஆட்டத்தில் போர்ன்மத்தின் ஒரே கோலைப் போட்ட மார்க்கஸ் டேவனியர் (வலது). - படம்: இபிஏ

ஆட்டம் 90 நிமிடங்களைத் தாண்டிய பிறகு சிட்டி வெற்றி கோலைப் போட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக பயிற்றுவிப்பாளர் பெப் குவார்டியோலாவின்கீழ் அசத்திவந்த சிட்டி இப்பருவம் புதிய பயிற்றுவிப்பாளர் என்சோ மரெஸ்காவுக்குக்கீழ் விளையாடுகிறது.

குறிப்புச் சொற்கள்