தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேன்யூ நிர்வாகிக்கு மகிழ்ச்சியும் விரக்தியும் கலந்த ஓர் உணர்வு

1 mins read
980a6b97-507c-4821-ad35-9cd1c0096184
அக்டோபர் 6ஆம் தேதி ஆஸ்டன் வில்லா உடனான ஆட்டத்தில் நடுவருடன் பேசும் ஜானி எவன்ஸ், புருனோ ஃபெர்னாண்டெஸ். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெறும் வெஸ்ட் ஹேம் யுனைடெட் உடனான காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணித்தலைவர் புருனோ ஃபெர்னாண்டெஸ், ஜானி எவன்ஸ் இருவரையும் நிர்வாகி எரிக் டென் ஹாக் களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களின் வருகை டென் ஹாக்கிற்கு மகிழ்ச்சி தந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து இரண்டாவது பருவமாக, காயங்கள் காரணமாக முக்கிய மேன்யூ ஆட்டக்காரர்கள் விளையாட முடியாமல் போவது குறித்து டென் ஹாக் விரக்தி அடைந்துள்ளார்.

இந்தப் பருவம் எட்டு ஆட்டங்களுக்குப் பிறகு மேன்யூ வெறும் 11 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

காயம் காரணமாக கோபி மய்னூ, ஹேரி மெக்வாயர் இருவரும் மேன்யூவுக்காக இன்னும் களமிறங்க முடியவில்லை.

இதுகுறித்து பேசிய டென் ஹாக், “இதனால்தான் லீக்கில் நாங்கள் முன்னேற முடியாமல் எங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆட்டக்காரர்கள் இல்லாமல் மிகச் சிறந்த அணியைக் களமிறக்க முடியாது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்