லண்டன்: இப்பருவத்திற்கான யூரோப்பா லீக் காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அதன் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி நள்ளிரவுக்கு பின் நடந்த ஆட்டத்தில் யுனைடெட் அணி கிரீசின் பிஏஓகே (PAOK) அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் திணறின. வாய்ப்புகள் கிடைத்தும் அவை சரியாக பயன்படுத்தவில்லை.
இருப்பினும் இரண்டாவது பாதியில் யுனைடெட் அதிரடி ஆட்டத்தில் இறங்கியது.
ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் யுனைடெட்க்கு அமாட் டியாலோ முதல் கோல் அடித்தார். 77வது நிமிடத்தில் டியாலோ மீண்டும் கோல் அடிக்க ஆட்டத்தை 2-0 என்ற கோல் கணக்கில் யுனைடெட் வெற்றி பெற்றது.
இதுவரை நான்கு யூரோப்பா லீக் ஆட்டத்தில் விளையாடியுள்ள யுனைடெட் ஒரு வெற்றி, மூன்று சமநிலை என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது.
முன்னாள் நிர்வாகி எரிக் டென் ஹாக் தலைமையில் யுனைடெட் மூன்று ஆட்டங்களையும் சமம் மட்டுமே செய்தது.
தற்போது தற்காலிக அணி நிர்வாகியாக செயல்பட்டு வரும் ரூட் வான் நிசல்ரோய் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் யுனைடெட் மூன்று ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி 1 சமநிலையை பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
யுனைடெட்டின் நிர்வாகியாக ரூபன் அமோரிம் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் நவம்பர் 11ஆம் தேதி யுனைடெட் குழுவுக்கு நிர்வாகியாக பொறுப்பேற்பார். அவர் 2027ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.