லண்டன்: இங்கிலாந்து காற்பந்து சங்கம் எவர்ட்டன் மற்றும் லிவர்பூல் குழுக்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
அண்மையில் இரு குழுக்களும் மோதிய ஆட்டத்தின்போது இரு குழு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
விளையாட்டு வீரர்களைக் கட்டுக்குள் வைக்கத் தவறிய காரணத்திற்காக இரு குழுக்களுக்கும் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எவர்ட்டன் குழுவிற்கு 64,000 வெள்ளியும் லிவர்பூல் குழுவிற்கு கிட்டத்தட்ட 40,000 வெள்ளியும் அபராதமாக விதித்தது சங்கம்.
இரு குழுக்களும் தங்களது தவற்றை ஒப்புக்கொண்டதாகவும் இனி விளையாட்டாளர்களைக் கவனமாகக் கண்காணிப்பதாக அவை உறுதிகூறியதாகவும் இங்கிலாந்துக் காற்பந்து சங்கம் தெரிவித்தது.

