உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் போட்டா போட்டி

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் போட்டா போட்டி

படம்: ஏஎஃப்பி

18 Nov 2026 - 7:15 pm

2 mins read

துபாய்: அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பங்கள் எதிர்பார்த்ததைவிடப் பலமடங்கு பதிவாகியுள்ளன.

இதனால் போட்டியின் இயக்குநர் சாரா எட்கர் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளார். கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் இப்போது கட்டாயம் காணவேண்டிய நிகழ்வாக உருமாற்றியுள்ளது எனவும் அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை நமீபியா, தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே நாடுகள் இணைந்து அப்போட்டியை நடத்துகின்றன. 

அதற்காக அனைத்துலகக் கிரிக்கெட் மன்றம் ஏறக்குறைய 140 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. நுழைவுச்சீட்டுகளுக்கான குலுக்கல் சனிக்கிழமை (நவம்பர் 21) முடிவடைகிறது.

“24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவிற்கு உலகக் கிண்ண கிரிக்கெட் திரும்புகிறது. கிட்டத்தட்ட 200 நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன,” என எட்கர் தெரிவித்தார்.

அக்டோபர் 10ஆம் தேதி ஜோகனஸ்பர்க்கில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு 8 மில்லியன் நுழைவுச்சீட்டுக் கோரிக்கைகள் வந்துள்ளன. 

“தென்கிழக்காசியாவில் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. எனினும் உலகெங்குமிருந்தும் ரசிகர்கள் திரள்வர் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் எட்கர். 

போட்டிகள் நடைபெறும் 12 இடங்களிலும் எட்கர் ஆய்வு மேற்கொண்டார். அந்த இடங்கள் பல்வேறு மேம்பாட்டுக் கட்டங்களில் உள்ளன.

“சில இடங்களில் சிறிய அளவிலான மேம்பாடுகள் மட்டுமே தேவைப்படுகின்றன. விக்டோரியா ஃபால்ஸ், விண்ட்ஹோக் போன்ற இடங்களில் போட்டிக்காகவே புதிதாக அரங்குகள் கட்டப்படுகின்றன,” என அவர் தெரிவித்தார்.

2003ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஆப்பிரிக்காவிற்கு உலகக் கிண்ணப் போட்டிகள் திரும்புவதால் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். 

குறிப்புச் சொற்கள்