குழந்தைகளுக்காக பொம்மை மழையில் நனைந்த ஆடுகளம்

குழந்தைகளுக்காக பொம்மை மழையில் நனைந்த ஆடுகளம்

1 mins read
e285cd48-52d6-4bce-ac25-3dd0acc4d4c6
படம்: ராய்ட்டர்ஸ் -

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தங்கள் அன்பைக் காட்டும் விதமாகக் காற்பந்து ரசிகர்கள் மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றை செய்துள்ளனர்.

துருக்கி உள்ளூர் காற்பந்து அணிகளான பெஸிக்டாஸ் அணியும் அண்டாலியஸ்பர் அணியும் பிப்ரவரி 26 ஆம் தேதி விளையாடின.

அப்போது ஆட்டத்தின் 4வது நிமிடம் 17ஆவது வினாடியில் ரசிகர்கள் குழந்தைகளுக்கான பொம்மைகளை ஆடுகளத்தில் வீசினர்.

ஆடுகளத்தில் வீசப்பட்ட பொம்மைகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும்.

காற்பந்து மூலம் இந்த உதவி செய்வது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தருவதாக விளையாட்டு வீரர்களும் ஆட்டத்தை காண வந்த ரசிகர்களும் கூறினர்.

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6ஆம் தேதி அதிகாலை 4 மணி 17ஆவது நிமிடத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதில் 50,000-க்கும் அதிகமானோர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்