தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிவேக 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் சாதனை

1 mins read
25496a55-9a9a-43cf-8b6c-e86aee2472e5
ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் ஓமானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசும் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங். - படம்: ஏஎஃப்பி

அபுதாபி: அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டிகளில் நூறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்.

ஆசியக் கிண்ண டி20 தொடரில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) ஓமானுக்கு எதிரான போட்டியில் விநாயக் சுக்லாவை ஆட்டமிழக்கச் செய்ததன்மூலம் அவர் அந்த மைல்கல்லை எட்டினார். அனைத்துலக அளவில், அந்த மைல்கல்லைத் தொட்ட 25வது வீரர் அவர்.

அதே நேரத்தில், குறைந்த போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் அர்ஷ்தீப் நான்காம் இடத்தில் உள்ளார். இச்சாதனையை நிகழ்த்த இவருக்கு 64 ஆட்டங்களே தேவைப்பட்டன.

ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் (53 ஆட்டங்கள்), சந்தீப் லமிசானே (54 ஆட்டங்கள்), இலங்கையின் வனிந்து ஹசரங்கா (63 ஆட்டங்கள்) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்