இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிப் போட்டியின்போது அணியினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) விசாரணை நடத்துகிறது.
உலகளாவிய காற்பந்து நிர்வாக அமைப்பான ஃபிஃபா, மோதல் குறித்து விசாரிப்பதற்காக காற்பந்து ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறைகளுக்கான வழக்கறிஞர் ஒருவரை நியமித்துள்ளது.
அந்த விசாரணை எப்போது முடிவடையும் என்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
உலகக் கிண்ணப் போட்டியின் கூடுதல் நேரத்தில் ஸ்பானிய வீரர் விங்கர் ஃபெரான் டோரஸ் அடித்த கோல் ஸ்பெயினுக்கு வெற்றி மகுடம் சூட்டியது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் மீண்டும் ஸ்பெயின் உலகக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற அந்த ஆட்டம் முடிந்த பின்னர் திடலில் பதற்றம் தொற்றிக்கொண்டது.
போட்டியின் 93வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால், 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு அர்ஜென்டினா அணி தள்ளப்பட்டிருந்தது.
போட்டி முடிந்ததும் அர்ஜென்டினாவின் மத்திய திடல் வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ் ஸ்பெயின் வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இரு அணியினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இரு அணியினரையும் பலவந்தமாகப் பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமது வீரர்களை அமைதிப்படுத்த அர்ஜென்டினா பயிற்றுநர் லியோனல் ஸ்கலோனி முயன்றார்.

