கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின்போது, சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் குரோவேஷியாவின் முன்னாள் மாடல் அழகி இவானா நோல்.
இவர் கவர்ச்சிகரமாக ஆடை அணியும் முறையால் இணையத்தில் பிரபலமானார்.
இவானாவை திருமணம் செய்துகொள்ள பலரும் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காற்பந்து வீரர்கள்கூட இவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், உலகக் கிண்ணப் போட்டியின்போது எவரையும் சந்திக்க தமக்கு விருப்பம் இல்லை என்று இவானா கூறுகிறார்.
"அனைவருடன் சேர்ந்து ஜாலியாக இருக்க நான் விரும்புகிறேன். என் அழகிய தோற்றத்தால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர் என நினைக்கிறேன். மக்களைப் புன்னகைக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். நான் சந்திக்கும் ரசிகர்கள் என்னை விரும்புகின்றனர்.
"ஆனால், இப்போதெல்லாம் அரங்குகளில் காற்பந்து ஆட்டங்களைக் காணும்போது, என் நண்பர்கள் என்னுடன் சேர்ந்து அமருவதில்லை. புகைப்படக் கருவிகளின் கவனம் என் மீது இருப்பதால் என் நண்பர்கள் நகர்ந்துவிடுகின்றனர்," என்று இவானா கூறுகிறார்.


