தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் ஆகப்பெரிய பணக்காரரிடமிருந்து வாழ்த்து பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர்

1 mins read
b12727fb-a861-4107-8188-c2601cd10c3b
சிங்கப்பூரில் நடந்த உலக சதுரங்க வெற்றியாளர் போட்டியில் வென்ற பிறகு, பரிசளிப்பு விழாவில் இந்திய வீரர் குகேஷ் தொம்மராஜு பேசுவது திரையில் காண்பிக்கப்படுகிறது. - படம்: இபிஏ
multi-img1 of 2

சதுரங்க விளையாட்டில் வியத்தகு திறமையுடைய இந்தியாவின் குகேஷ் தொம்மராஜு, 18, சிங்கப்பூரில் நடந்த உலக சதுரங்க வெற்றியாளர் போட்டியில் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ஐந்து முறை வெற்றியாளரான விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, இப்போட்டியில் வென்றுள்ள இரண்டாவது இந்தியராவார் குகேஷ்.

குகேஷுக்கு இந்தியாவிலிருந்தும் உலகெங்கிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துவரும் வேளையில், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்கிடமிருந்தும் வாழ்த்துகளை அவர் பெற்றார்.

உலகின் ஆகப்பெரிய பணக்காரரான மஸ்கிடமிருந்து வாழ்த்து பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் குகேஷ் என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டது.

தமது வெற்றியைக் கொண்டாடிய குகேஷின் சமூக ஊடகப் பதிவுக்கு, எக்ஸ் தளத்தில் மஸ்க் வாழ்த்துக் கூறினார். மஸ்கின் அந்தப் பதிவு 13,000 விருப்பக்குறிகளையும் கிட்டத்தட்ட 200,000 பார்வைகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வெற்றியாளர் பட்டத்தை இந்தியா கொண்டுசெல்கிறார் குகேஷ்.

குறிப்புச் சொற்கள்