வெள்ளை அட்டை - காற்பந்தில் புதுவகை!

லிஸ்பன்: காற்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சள், சிவப்பு அட்டைகள் குறித்து அவ்விளையாட்டு ரசிகர்கள் அனைவருமே அறிந்திருப்பர்.

இந்நிலையில், போர்ச்சுகலில் நடந்த ஒரு காற்பந்து ஆட்டத்தின்போது முதன்முறையாக வெள்ளை அட்டை பயன்படுத்தப்பட்டது.

கடந்த சனிக்கிழமை 21ஆம் தேதி, போர்ச்சுகல் கிண்ணக் காலிறுதி ஆட்டத்தில் பென்ஃபிகா-ஸ்போர்ட்டிங் லிஸ்பன் மகளிர் குழுக்கள் மோதின.

பிற்பாதி ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களே ஆனபோது, ஆட்ட நடுவர் கேத்தரினா கெம்போஸ் வெள்ளை அட்டையை உயர்த்திக் காட்டினார். அதனைக் கண்டதும் பார்வையாளர் பகுதியில் இருந்த ரசிகர்கள் பேராரவாரம் செய்தனர்.

விளையாட்டுத் திடலில் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வதை மெச்சும் நோக்கில் வெள்ளை அட்டையைப் போர்ச்சுகல் அறிமுகம் செய்துள்ளது.

உண்மையில், அந்த அட்டை விளையாட்டு வீரர்களை நோக்கிக் காட்டப்படவில்லை.

ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது பார்வையாளர் பகுதியிலிருந்த ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார். அதுபற்றி அறிந்ததும் இரு குழுக்களையும் சேர்ந்த மருத்துவக் குழுவினர் ஓடிச் சென்று, அந்த ரசிகருக்கு சிகிச்சை அளித்தனர்.

அச்செயலை அங்கீகரித்து, பாராட்டும் வகையில், மருத்துவக் குழுவினரை நோக்கி வெள்ளை அட்டையை உயர்த்திக்காட்டினார் நடுவர் கெம்போஸ்.

சாதனை எண்ணிக்கையில் திரண்டிருந்த ரசிகர்களுக்குமுன் நடந்த அந்த ஆட்டத்தில் பென்ஃபிகா குழு 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!