தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: ஆர்சனலுடன் மோதும் ஏசி மிலான்

1 mins read
483dec39-2a8a-45a5-8610-a287a3095486
ஹோட்டல்முன் கூடியிருந்த சிங்கப்பூர் ரசிகர்களுக்கு ஆர்சனல் அணியின் டெக்லான் ரைஸ் நினைவொப்பமிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் காற்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சிங்கப்பூர்க் காற்பந்துத் திருவிழா புதன்கிழமை (ஜூன் 23) தொடங்குகிறது.

ஆர்சனல், ஏசி மிலான், நியூகாசல் யுனைடெட் ஆகிய முன்னணிக் காற்பந்துக் குழுக்கள் சிங்கப்பூரில் விளையாடுகின்றன.

முதல் ஆட்டத்தில் ஆர்சனல் குழுவும் ஏசி மிலான் குழுவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் புதன்கிழமை இரவு 7.30 மணிக்குத் தேசிய விளையாட்டரங்கில் நடக்கிறது.

அடுத்த மாதம் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் தொடங்கவுள்ளதால் இந்த ஆட்டம் ஆர்சனலுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு பருவங்களிலும் இரண்டாவது இடத்தில் முடித்த ஆர்சனல் குழு, இம்முறை கிண்ணத்தை வெல்ல வேண்டிய முனைப்பில் உள்ளது.

அதனால், சிங்கப்பூரில் நடக்கும் இரண்டு ஆட்டங்களிலும் தனது பலங்களையும் பலவீனங்களையும் ஆர்சனல் ஆராய்ந்து மதிப்பிட முயலும்.

ஏசி மிலானுக்கும் கடந்த பருவம் சரியாக அமையவில்லை. அதனால், அக்குழுவும் ஆர்சனலுக்கு எதிராகத் தனது பலத்தைச் சோதிக்கக்கூடும்.

ஏசி மிலானில் இடம்பெற்றுள்ள அமெரிக்க ஆட்டக்காரர் கிறிஸ்டியன் புலிசிச் ஆர்சனலின் தற்காப்புக்குச் சவால்விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சனல் குழுவின் முன்னணி வீரர்களான சலிபா, டெக்லான் ரைஸ், ஸாக்கா, கய் ஹவெர்ட்ஸ், கோல்காப்பாளர் ராயா ஆகியோர் ஏசி மிலானுக்கு எதிராக விளையாடக்கூடும்.

காயத்திலிருந்து கேப்ரியல் ஜேசுஸ் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்பதால் அவர் சிங்கப்பூருக்கு வரவில்லை.

குறிப்புச் சொற்கள்