காற்பந்து: முதலிடத்தைத் தக்க வைக்க நினைக்கும் ஆர்சனல்

1 mins read
ba73c0cb-b8c1-4485-b0a4-2a29c9748fdc
ஆர்சனல் குழு தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றிபெற்று 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) இரவு இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக்கான மூன்று ஆட்டங்கள் நடக்கவுள்ளன.

முதல் ஆட்டத்தில் ஆர்சனல் குழுவும் கிறிஸ்டல் பேலஸ் குழுவும் மோதுகின்றன. சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் இரவு 10 மணிக்குத் தொடங்குகிறது.

ஆர்சனல் குழு தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றிபெற்று 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அது பேலஸ் குழுவுக்கு எதிராகவும் வெற்றி நடையைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 10 மணிக்கு நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழுவும் ஆஸ்டன் வில்லா குழுவும் மோதுகின்றன. சிட்டி இப்பருவத்தில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது அக்குழுவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

வில்லா எட்டு ஆட்டங்களில் மூன்றில் மட்டுமே வெற்றிபெற்றுத் திணறி வருகிறது.

நள்ளிரவுக்குப்பின் நடக்கும் 12.30 மணி ஆட்டத்தில் எவர்ட்டனும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவும் விளையாடுகின்றன. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் ஆர்சனல் முதலிடத்தில் உள்ளது.

மான்செஸ்டர் சிட்டி 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. போர்ன்மோத் குழு 15 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் 15 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்