பிரெஞ்சுக் காற்பந்துக் குழுத் தலைவராக எம்பாப்பே

1 mins read
a2f63c74-8ad6-408e-8220-712c11d58454
பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவிற்காக இதுவரை 66 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் கிலியன் எம்பாப்பே. கோப்புப்படம்: ஏஎஃப்பி -

பாரிஸ்: பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவின் தலைவராக கிலியன் எம்பாப்பே நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பரில் உலகக் கிண்ணப் போட்டிகள் முடிந்ததும் பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவின் தலைவரான ஹியூகோ லோரிஸ், 36, ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

அவர் பத்தாண்டுக் காலத்திற்கும் மேலாக அவ்வணியின் தலைவராகச் செயல்பட்டார்.

இதனையடுத்து, பிரெஞ்சுக் குழுவின் பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோமுடன் பேசிய பிறகு அக்குழுவின் தலைவராகச் செயல்பட 24 வயதாகும் எம்பாப்பே ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எம்பாப்பே பிரெஞ்சுக் குழுவிற்காக இதுவரை 66 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

வரும் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் நெதர்லாந்திற்கு எதிரான '2024 யூரோ கிண்ண' தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதன்முறையாக எம்பாப்பே தலைமையில் பிரெஞ்சுக் குழு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.