தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து வீரருக்குச் சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி

1 mins read
973dd07d-2ad3-4cfc-80d0-3093ac6ef35c
2024 செப்டம்பர் 2ஆம் தேதி காலாங் காற்பந்து நடுவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் பெர்ரி இங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கார்டிஃப் சிட்டி காற்பந்து விளையாட்டாளர் பெர்ரி இங்கிற்கு சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி கிடைத்துள்ளது. இதன்மூலம், சிங்கப்பூர் காற்பந்து அணிக்கு விளையாடத் தகுதிபெறுவதில் ஒரு படி முன்னேறியுள்ளார்.

இன்ஸ்டகிராமில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) அவர் வெளியிட்ட பதிவில், “ஹலோ சிங்கப்பூர், சிவப்புச் சீருடையை அணிவதற்கான முதற்படியை நான் எடுத்து வைத்துள்ளேன்,” என்றார்.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையக் கட்டடம் பின்னணியில் இருக்கையில், தமது நீல நிற அடையாள அட்டையை அவர் காண்பித்தார்.

வெளிநாட்டு விளையாட்டுத் திறனாளர் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையில் இங், 28, ஈடுபட்டு வருவதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சியூ சுன் லியாங் கடந்த மாதம் கூறியிருந்தார்.

இத்திட்டத்தின்கீழ், இங்கு பிறந்திடாத அல்லது இங்கு பரம்பரை தொடர்புடைய வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்குச் சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்படுகிறது.

பிரிட்டனில் பிறந்த இங்கின் விண்ணப்பம் வெற்றிகரமாக அமைந்தால், சீனாவில் பிறந்த ஸியூ லிக்கு 2010ல் குடியுரிமை வழங்கப்பட்டதற்குப் பிறகு, இத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் குடியுரிமை பெறும் முதல் காற்பந்து வீரராக இங் விளங்குவார்.

குறிப்புச் சொற்கள்