தொழில்நுட்பத்துறைப் பெருஞ்செல்வந்தரும் லயன் சிட்டி செய்லர்ஸ் காற்பந்துக் குழுவின் தலைவருமான ஃபாரஸ்ட் லீ, சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் (எஃப்ஏஎஸ்) தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட இருந்த பாலஸ்டியர் கல்சா காற்பந்துக் குழுவின் உதவித் தலைவர் டார்வின் ஜலிலும் அவரது குழுவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து திரு லீ தலைவராக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டார்வின் ஜலிலின் குழுவில் ஒன்பது பேர் அங்கம் வகித்தனர்.
அவர்களில் ஒருவருக்கு எஃப்ஏஎஸ் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டதை அடுத்து அந்தக் குழு ஒட்டுமொத்தமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஆனால், அந்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.
மாறாக, லீயின் குழுவினர் அனைவரும் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து டார்வின் ஜலில் ஏமாற்றம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
எஃப்ஏஎஸ் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சங்கத்துக்கு உட்பட்ட காற்பந்துப் போட்டிகளில் பங்கெடுத்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது உலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் அதிகாரியாகப் பங்களித்திருக்க வேண்டும்.