தென் கிழக்காசியாவில் ஆண்டுக்கு இரண்டு எஃப்1 பந்தயங்கள் நடத்த திட்டம்

தென் கிழக்காசியாவில் ஆண்டுக்கு இரண்டு எஃப்1 பந்தயங்கள் நடத்த திட்டம்

1 mins read
d94d5077-acd5-4fa2-9818-5f69a76727a0
ஆண்டுக்கு 24 எஃப்1 கார் பந்தயங்கள் நடக்கின்றன.  - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: ஃபார்முலா ஒன் என்னும் எஃப்1 கார் பந்தயங்கள் தற்போது சீனாவில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

கொவிட்-19 காரணமாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு சீனாவில் எஃப்1 கார் பந்தயம் இடம்பெற்றது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதனால் தென் கிழக்காசியாவில் ஆண்டுக்கு இரண்டு பந்தயங்கள் நடத்த எஃப்1 திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்டுக்கு 24 எஃப்1 கார் பந்தயங்கள் நடக்கின்றன. தென் கிழக்காசியா வட்டாரத்தில் சிங்கப்பூர் மட்டுமே எஃப்1 கார் பந்தயத்தை நடத்தி வருகிறது.

தாய்லாந்து, தென்கொரியா, இந்தோனீசியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கார் பந்தயங்களை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக எஃப்1 நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி கிரேக் மாஃபெய் தெரிவித்தார்.

தென்கொரியாவின் இயோன்கமில் இதற்கு முன் எஃப்1 கார் பந்தயங்கள் நடந்துள்ளன. தலைநகர் சோலில் பந்தயத்தை நடத்த அந்நாட்டு ஏற்பாட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தும் பேங்காக்கில் எஃப்1 கார் பந்தயத்தை நடத்த எண்ணுகிறது.

இதற்கு முன் தென் கிழக்காசியா வட்டாரத்தில் மலேசியாவும் எஃப்1 கார் பந்தயத்தை நடத்தியிருந்தது. பல்வேறு காரணங்களால் அது தற்போது நடப்பதில்லை.

குறிப்புச் சொற்கள்