பிரெஞ்சு பொது விருது டென்னிஸ்: சின்னா், சுவரேவ் காலிறுதிக்கு தகுதி

1 mins read
561d58ca-04a0-45f3-8510-df78e116c9eb
உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ். - படங்கள்: இணையம்

பாரிஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு பொது விருது டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4வது சுற்று ஆட்டத்தில் 17வது இடத்தில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவை (ரஷ்யா) எதிர்கொண்டார்.

இதில் சின்னர் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியைப் பெற அவருக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது. சின்னர் கால் இறுதியில் கஜகஸ்தானைச் சேர்ந்த அலெக் சாண்டர் பப்ளிக்கைச் சந்திக்கிறார். அவர் 4வது சுற்றில் 5வது இடத்தில் உள்ள ஜேக் டிராபரை (இங்கிலாந்து) 5-7, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மற்றோர் ஆட்டத்தில் 3வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4வது சுற்றில் கிரிக்ஸ்பூரை (நெதர்லாந்து) எதிர்கொண்டார். இதில் சுவரேவ் 6-4, 3-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கிரிக்ஸ்பூர் காயத்தால் விலகினார். இதனால் சுவரேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஜோகோவிச்-சுவரேவ் கால் இறுதியில் மோதுகிறார்கள்.

24 முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 6ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 4வது சுற்றில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நாரியை 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

குறிப்புச் சொற்கள்