பும்ரா அதிபுத்திசாலி: ரோகித் சர்மா

1 mins read
cabbeee4-0436-4d9b-bfa8-968213ed788f
மூன்று விக்கெட்டுகள் விழ்த்திய உற்சாகத்தில் பும்ரா. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சளரான ஜஸ்பிரிட் பும்ரா, அதிபுத்திசாலி என்று அணித் தலைவர் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் டி20 உலகக் கிண்ணப் போட்டியின் ஏ பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தானை ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. அதில் பும்ரா அசத்தினார்.

முதலில் பந்தடித்த இந்தியா 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. ஆனால் பிறகு இந்தயா, பாகிஸ்தானை 113 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க விடவில்லை.

ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ஓட்டங்களை எடுத்தது பாகிஸ்தான். மூன்று விக்கெட்டுகளை விழ்த்தினார் பும்ரா.

“அவர் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறார். அவரால் என்ன செய்யமுடியும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அவரைப் பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை.

“இந்த உலகக் கிண்ணப் போட்டி முழுவதும் அவர் இதே மனப்போக்குடன் இருக்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் அதிபுத்திசாலி என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே,” என்று பும்ராவைப் புகழ்ந்தார் ரோகித்.

பும்ரா, இந்தியாவின் ஆகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராவார்.

குறிப்புச் சொற்கள்