இபிஎல் காற்பந்து: நூறாண்டுகளில் இல்லாத கோல்மழை

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து வரலாற்றில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் இப்பருவத்தில் கோல் போடுவது அதிகரித்துள்ளது.

2023-24 பருவம் முடிவை நெருங்கும் நிலையில், இம்முறை சராசரியாக ஓர் ஆட்டத்திற்கு 3.24 கோல்கள் விழுந்துள்ளன. இது 2022-23 பருவத்தைவிட 13% அதிகம். கடந்த பருவத்தில் சராசரியாக ஓர் ஆட்டத்திற்கு 2.85 கோல்கள் விழுந்தன. 1925-26 பருவத்திற்குப் பிறகு ஆகப் பெரிய கோல் விகித உயர்வு இதுதான்.

கடந்த 1925-26 பருவத்தில் தாக்குதல் ஆட்டக்காரர்களுக்குச் சாதகமான வகையில் ‘ஆஃப் சைடு’ விதி திருத்தியமைக்கப்பட்டது.

நடப்புப் பருவ பிரிமியர் லீக்கில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமாக கோல்கள் ஆட்டத்தின் 76ஆம் நிமிடத்திற்குப் பிறகே அடிக்கப்பட்டதாக சாக்கர்ஸ்டேட்ஸ்.காம் இணையத்தளம் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், பிரைட்டன், பிரென்ட்ஃபர்ட் ஆகிய குழுக்களின் கோல் சராசரி, கடந்த பருவத்தைக் காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஆர்சனல், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி என மூன்று குழுக்கள் பட்டத்திற்கான போட்டியில் உள்ளன. இந்நிலையில், ஆர்சனல் குழுவின் கோல் விகிதம் இம்முறை நன்றாக இருப்பது அதற்குச் சாதகமாக அமைந்துள்ளது.

இம்முறை 28 ஆட்டங்களில் 70 கோல்களை, அதாவது சராசரியாக ஓர் ஆட்டத்திற்கு 2.5 கோல்களை அக்குழு அடித்துள்ளது. 1934-35 பருவத்திற்குப் பிறகு இதுவே ஆக அதிக கோல் விகிதச் சராசரி என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!