நாயின் வாயில் சிக்கிய நுழைவுச்சீட்டின் கதி!

1 mins read
32907be1-252f-48e3-a4a5-8e75925162d3
இறுதியாட்டத்திற்கான நுழைவுச்சீட்டு இந்தக் கோலத்தில் இருப்பதைக் கண்டு பெரிதும் ஏமாற்றமடைந்த ஆலன் கார்லிங். படம்: ஃபேஸ்புக் -

பல நாள்களாகக் காத்திருந்து, ஆசையாக வாங்கிய காற்பந்து இறுதிப் போட்டிக்கான நுழைவுச்சீட்டை தமது செல்ல நாய் கடித்துக் கிழித்துவிட்டது. இதனால் கடுப்பான அதன் உரிமையாளர், அந்த நாயை வெறும் 8 வெள்ளிக்கு விறபனை செய்ய முன்வந்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் கார்லிங், நியூகாசல் யுனைடெட் காற்பந்துக் குழுவின் தீவிர ரசிகர். அந்நாட்டின் முன்னணிக் காற்பந்துத் தொடர்களில் ஒன்றான லீக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கான நுழைவுச்சீட்டு கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு அஞ்சலில் வந்தது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஞ்சல் வந்ததால், ஆலனின் செல்ல நாய் அஞ்சலைக் கடித்து கிழித்து, உள்ளிருந்த நுழைவுச்சீட்டை சேதப்படுத்தியது.

இறுதிப் போட்டியில் தமது குழு நிச்சயம் கிண்ணம் வெல்லும், அதனை நேரில் காணலாம் என்று மிகுந்த ஆர்வத்தில் இருந்தார் ஆலன்.

ஆனால், வீட்டிற்கு வந்ததும் தமது நாய் செய்திருந்த செயலைக் கண்டதும் அவர் மனம் வெறுத்துப்போனார்.

அதனால், 115 வெள்ளி மதிப்புடைய அந்த நுழைவுச்சீட்டு பறிபோனது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட ஆலன், தமது

நாய் ரூடியை 8 வெள்ளிக்கு விற்கப்போவதாகவும் விளையாட்டாகவும் குறிப்பிட்டார்.

லீக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கிறது. அதில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் நியூகாசல் குழுவும் மோதுகின்றன.