தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மீச்சிறு’ உலகக் கிண்ணம்!

1 mins read
e2f0d106-3959-493d-867d-b719ce7f3e72
ஆகச் சிறிய உலகக் கிண்ண மாதிரி. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

அகமதாபாத்: இந்தியாவில் உலகக் கிண்ணப்போட்டிகள் நடந்துவருவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குக் கொண்டாட்டம்தான்!

கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் தாங்கள் நேசிக்கும் அணிகளுக்குப் புதுமையான வழிகளில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், மிகச் சிறிய உலகக் கிண்ண மாதிரியைத் தங்கத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நகை வல்லுநர் ஒருவர்.

அகமதாபாத் மாவட்டம், ஜமால்பூர் நகரைச் சேர்ந்த ரவுஃப் ஷேக் என்ற அவர் உருவாக்கியுள்ள இந்த உலகக் கிண்ண மாதிரியின் எடை வெறும் 0.9 கிராம்தான்.

கடந்த 2014, 2019ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளின்போதும் இப்படி எடை குறைந்த உலகக் கிண்ண மாதிரிகளை அவர் உருவாக்கியிருந்தார்.

“2014ஆம் ஆண்டு 1.2 கிராம் எடையில் உலகக் கிண்ண மாதிரியைப் படைத்திருந்தேன். அதன்பின் 2019ஆம் ஆண்டில் ஒரு கிராமில் அதனை உருவாக்கினேன். இப்போது, 0.9 கிராமில் அதனை வடிவமைத்துள்ளேன்,” என்றார் ஷேக்.

வாய்ப்பு கிடைத்தால் அகமதாபாத்தில் சனிக்கிழமை நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது, அந்த ‘மீச்சிறு’ உலகக் கிண்ணத்தை இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மாவிடம் வழங்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்