லண்டன்: விம்பிள்டன் விருதைத் தற்காத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று யானிக் சினர் கூறியிருக்கிறார்.
சென்ற மாதம் பிரெஞ்சுப் பொது விருது ஆண்கள் ஒற்றையர் போட்டியில் தொடக்கத்திலேயே வெளியேறிய அவருக்கு, இந்த வெற்றி ஆனந்தத்தைக் கொடுத்துள்ளது.
லண்டனின் பசும்புல்வெளித் திடலில் போட்டியிட நீண்டகாலம் கடுமையாகப் பயிற்சி செய்ததாகச் சொன்னார் சினர்.
இத்தாலியின் 24 வயது சினர், இரண்டு வாரத்துக்கு முன்பே அங்குச் சென்று பயிற்சி செய்யத் தொடங்கினார்.
“ஒவ்வொரு கிராண்ட் ஸ்லேம் போட்டியும் வித்தியாசமானது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வேறுபட்ட கதை, வேறுபட்ட சூழல், வேறுபட்ட உணர்வு,” என்று சினர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பாரிசுக்குப் பிறகு நிலைமை கடினமாக இருந்தது. கடந்த ஆண்டும் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இங்கு வந்த பிறகு, முடிந்தவரை போட்டிகொடுக்க என்னைச் சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள முயற்சி செய்தேன்,” என்றார் அவர்.
இது அவர் கைப்பற்றியுள்ள ஐந்தாவது ஆகப் பெரிய விருது.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சினர், கடும்போராட்டத்திற்குப் பிறகு ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவை நான்கு செட்களில் வெற்றிகண்டார். ஆட்டம் மூன்று மணிநேரம் 46 நிமிடங்கள் நீடித்தது. செட் விவரம்: 6-7(7), 7-6(2), 6-3, 6-4.


