ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்குத் தற்போது அடிமேல் அடி விழுந்து வருகிறது.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மேலும், டேவிட் வார்னர், ஆஸ்டன் ஏகார், மேட் ரென்ஷா ஆகியோரும் காயம் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தொடரில் சிறப்பாக விளையாடிவரும் சுழற்பந்துவீச்சாளர் டாட் மர்பியும் காயத்தால் தடுமாறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் அணியின் தலைவர், பேட் கம்மின்ஸ் குடும்பச் சூழல் காரணமாக நாடு திரும்புகிறார்.
அணி விளையாட்டாளர்கள் குறித்த விவரங்களை ஆஸ்திரேலியா விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு ஆட்டம் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை பெற்று, தொடரைத் தக்கவைத்துக்கொண்டது.
மூன்றாவது ஆட்டம் இந்தூரில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது