தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆட்டத்திற்கு அச்சுறுத்தல் தரும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

1 mins read
7e866ea9-cbb6-41d3-88d8-207471138e99
படம்: டுவிட்டர்/ தினே‌ஷ்கார்த்திக் -

அனைத்துலக கிரிக்கெட் மன்றம், இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் இறுதி ஆட்டத்திற்கு இரண்டு பந்துவீச்சு திடல்களை ஏற்பாடு செய்துள்ளது.

எண்ணெய் பயன்பாட்டிற்கு எதிராகப் போராடும் ஆதரவாளர்கள் விளையாட்டுப்போட்டிகள் நடக்கும் போது ஆடுகளத்தில் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆட்டத்தில் திடலையும் ஆடுகளத்தையும் சேதம் செய்யப்போவதாக போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடுகளத்தில் இரண்டு பந்துவீச்சு திடல்களை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆட்டம் இங்கிலாந்தின் கென்னிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடக்கிறது.

விளையாட்டு அரங்கை சுற்றியும் விளையாட்டு அரங்கத்திற்குள்ளும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை பந்துவீச்சு திடல் சேதமடைந்தால் இரு அணித்தலைவர்களின் ஒப்புதலோடு இரண்டாவது பந்துவீச்சு திடலில் ஆட்டம் தொடரும். அணித்தலைவர்களில் யாரேனும் ஒருவர் இரண்டாவது பந்துவீச்சு திடலில் விளையாட விருப்பம் இல்லை என்று கூறிவிட்டால் ஆட்டம் கைவிடப்படும்.

டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 7 முதல் 11 வரை நடக்கிறது. ஆட்டம் வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டால் கூடுதலாக மேலும் ஒரு நாள் அணிகளுக்கு வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்