தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.
நேற்று (பிப்ரவரி 20) அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டிஎல்எஸ் (DLS) முறையில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது.
இலக்கை விரட்டிய அயர்லாந்து 8.2 ஓவர் முடிவில் 54 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பின்னர் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டிஎல்எஸ் முறையில் ஆட்ட முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதக்கூடும்.

