புளூம்ஃபோன்டைன்: தென்னாப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாளில் அமெரிக்கா - அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியா, சனிக்கிழமை (ஜனவரி 20) தனது முதல் போட்டியில் பங்ளாதேஷை எதிர்கொள்கிறது.
மொத்தம் 16 அணிகள், நான்கு பிரிவுகளாக இத்தொடரில் மோதுகின்றன. பங்ளாதேஷ், இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து ஆகியவை ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன.
அரையிறுதிப் போட்டிகள் பிப்ரவரி 6, 8 தேதிகளிலும் இறுதிப் போட்டி பிப்ரவரி 11ஆம் தேதியும் நடைபெறும்.
இந்திய அணி விவரம்: உதய் சகாரன் (அணித்தலைவர்), சௌமி குமார் பாண்டே (துணைத்தலைவர்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ர மயூர் பட்டேல், சச்சின் தாஸ், பிரியான்ஷு மோலியா, முஷீர் கான், ஆரவல்லி அவினாஷ் ராவ் (விக்கெட் காப்பாளர்), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (விக்கெட் காப்பாளர்), தனுஷ் கௌடா, ஆராத்ய சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.