ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

1 mins read
5484c302-3a06-47ec-ad15-e976899d29c1
முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்துவார் என்று பிசிசிஐ கூறியது. படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக, வெள்ளிக்கிழமை (மார்ச் 17) மும்பையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனால் முதல் ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்துவார் என்று பிசிசிஐ கூறியது.

முதுகுவலி காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி விவரம்:

ரோகித் சர்மா, யுஸ்வேந்திர சஹால், இ‌‌‌ஷான் கி‌‌‌ஷ்ன், ரவீந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ், முகம்மது ‌‌ஷமி, முகம்மது சிராஜ், ஹார்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், கேஎல் ராகுல், ‌‌ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குர், உம்ரான் மாலிக், ஜெயதேவ் உனாத்கட், வா‌ஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ்.