கிரிக்கெட்: டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

கிரிக்கெட்: டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

1 mins read
c7367532-f2d4-410e-9d26-a809c066e15a
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

கிட்டத்தட்ட 15 மாதங்களாக முதலிடத்தில் நீடித்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (மே 2) தரவரிசை பற்றிய அறிவிப்புகள் வெளியானது.

உலக டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் இறுதி ஆட்டத்திற்கு முன் தரவரிசை வெளியானது இந்தியாவுக்கு ஊக்கம் தரும்விதமாக அமைந்துள்ளது.

மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

ஆட்டம் ஜூன் மாதம் 7ஆம் தேதி லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்