தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய கிரிக்கெட் வீரர் உலக சாதனை!

1 mins read
தென்னாப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லாவை முந்தினார்
e21be747-3a90-4f17-98fa-33d1f60c7b98
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2,000 ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனை புரிந்துள்ள ஷுப்மன் கில். - படம்: ஏஎஃப்பி

தர்மசாலா: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2,000 ஓட்டங்களை எட்டிய சாதனையை முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிராக 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கிண்ணப் போட்டியின்போது அவர் இதனைச் சாதித்துக் காட்டினார்.

ஈராயிரம் ஓட்டங்களை எட்ட கில்லுக்கு 38 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டன.

தென்னாப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா 40 இன்னிங்ஸ்களில் அந்த மைல்கல்லைத் தொட்டிருந்ததே முன்னைய சாதனை. அவர் 2011 ஜனவரி 21ஆம் தேதி இந்தியாவிற்கு எதிராக போர்ட் எலிசபெத்தில் நடந்த போட்டியின்போது அச்சாதனையைப் படைத்திருந்தார்.

டெங்கிக் காய்ச்சல் காரணமாக நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் முதலிரு போட்டிகளில் கில் விளையாடவில்லை. அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்மூலம் உலகக் கிண்ணத் தொடரில் அவர் அறிமுகமானார்.

அப்போட்டியில் அவர் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் பங்ளாதேஷுக்கு எதிரான போட்டியில் 53 ஓட்டங்களையும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 26 ஓட்டங்களையும் அவர் எடுத்தார்.

குறிப்புச் சொற்கள்