தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமநிலையில் முடிந்த இந்தியா-சிங்கப்பூர் காற்பந்து ஆட்டம்

1 mins read
fe69802c-e132-469c-98df-5644ac40d6f0
இந்தியாவிற்கு எதிரான ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் விழுந்த முதல் கோலை அடித்த மகிழ்ச்சியைச் சக வீரர்களுடன் கொண்டாடும் சிங்கப்பூர் வீரர் இக்‌ஷான் ஃபாண்டி (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஏஎஃப்சி ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவும் சிங்கப்பூரும் மோதிய மூன்றாம் சுற்று ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டம் வியாழக்கிழமை (அக்டோபர் 9) இரவு 7.30 மணிக்குத் தேசிய விளையாட்டரங்கில் நடந்தது.

ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் சிங்கப்பூர் தனது முதல் கோலை அடித்தது. இக்‌‌‌ஷான் ஃபாண்டி  தனக்குக் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.

47வது நிமிடத்தில் இந்தியாவின் சந்தே‌சுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது. அதனால், களத்தில் பத்து வீரர்களுடன் இந்தியா தத்தளித்தது.

சிங்கப்பூரின் தற்காப்பை உடைக்க முடியாமல் திணறிய இந்திய அணிக்குக் கைகொடுத்தார் ரஹீம் அலி. 90வது நிமிடத்தில் அவர் அடித்த கோலால் ஆட்டம் சமநிலை கண்டது.

இடைநிறுத்ததிற்காக இறுதியில் கூடுதலாக வழங்கப்பட்ட ஐந்து நிமிடங்களில் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும், இரு அணிகளாலும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

இந்த ஆட்டத்தை 13,200 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

சிங்கப்பூரின் அடுத்த மூன்றாவது சுற்று ஆட்டமும் இந்தியாவுடன்தான். அந்த ஆட்டம் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியாவின் கோவா நகரில் நடைபெறும்.

சவூதி அரேபியாவில் 2027ஆம் ஆண்டு ஏஎஃப்சி ஆசியக் கிண்ணப் போட்டிகள் நடக்கவுள்ளன.

குறிப்புச் சொற்கள்