மகளிர் டி20 உலகக்கிண்ணம்: இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுமா இந்தியா?

மகளிர் டி20 உலகக்கிண்ணம்: இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுமா இந்தியா?

23 Feb 2023 - 9:25 am

1 mins read

தென்னாப்பிரிக்காவில் தற்போது மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டி நடந்து வருகிறது.

அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் தகுதிபெற்றுள்ளன.

இன்று (பிப்ரவரி 23) இரவு, முதல் அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. அதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

ஆட்டம் கேப்டவுனில் நடக்கிறது.

தகுதிச்சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்தியா 4 தகுதி ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நாளை (பிப்ரவரி 24) இரவு இரண்டாம் அரையிறுதி ஆட்டம் இடம்பெறுகிறது. அதில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

இறுதியாட்டம் பிப்ரவரி 26ஆம் தேதி நடக்கிறது.