இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் நான்கு டெஸ்ட் ஆட்டம் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கிண்ணத் தொடர் இன்று நாக்பூரில் தொடங்கியது.
டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து அடிப்பதாக அறிவித்தது.
இந்திய அணியிடம் இருந்து இம்முறை கிண்ணத்தை மீட்பதில் ஆஸ்திரேலிய வீரர்கள் உறுதியாக இருப்பதாக அவ்வணியின் தலைவர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
சொந்த மண்ணில் ஆட்டம் நடப்பதால் இந்திய அணி தமது முழு பலத்தையும் காட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணித்தலைவர் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா, அஸ்வின் போன்ற மூத்த விளையாட்டாளர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட், கமரான் கீரின் ஆகியோர் முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

